எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து; அழைப்பினை ஏற்க மிசா பாரதி மறுப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்தில் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியினர் கலந்து கொள்ளமாட்டார்கள் என மிசா பாரதி கூறியுள்ளார்.
எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து; அழைப்பினை ஏற்க மிசா பாரதி மறுப்பு
Published on

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மோடி 2வது முறையாக மீண்டும் பிரதமரானார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்த நிலையில், எம்.பி.க்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி இன்றிரவு இரவு விருந்து அளிக்கிறார். இதில் கலந்து கொள்ள அவர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

இதுபற்றி ராஷ்டீரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த மற்றும் அக்கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் மகளான மிசா பாரதி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, முசாபர்பூர் நகரில் மூளை காய்ச்சலுக்கு எண்ணற்ற குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.

அதனால் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள இரவு விருந்தில் நாங்கள் கலந்து கொள்ளமாட்டோம். இந்த விருந்துக்கு ஆகும் செலவுக்கு ஈடாக மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் சாதனங்களை கொள்முதல் செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்நகரில் கடந்த ஜனவரியில் இருந்து மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே பரவி வருகிறது. இதில், கடந்த மாதத்தில் 11 பேர் வரை உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் 43 ஆக உயர்ந்தது.

நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நேற்று வரை அங்கு 126 குழந்தைகள் நோய்க்கு பலியாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com