ஆந்திர பிரதேசத்தில் சாலை விபத்து; 5 பேர் பலி

ஆந்திர பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 5 பேர் கொல்லப்பட்டனர்.
ஆந்திர பிரதேசத்தில் சாலை விபத்து; 5 பேர் பலி
Published on

நெல்லூர்,

ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் துவ்வுரு கிராமத்தில் தங்களுடைய பணியிடத்திற்கு செல்வதற்காக தொழிலாளர்கள் சிலர் வாகனம் ஒன்றில் கிளம்ப தயாராக இருந்தனர்.

இந்நிலையில், பால் வேன் ஒன்று திடீரென அந்த வாகனம் மீது பின்புறத்தில் இருந்து மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். ஒருவர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இதுதவிர பால் வேன் ஓட்டுனர் மற்றும் 3 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்து நெல்லூருக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com