டெல்லியில் சாலை விபத்து: 13 வயது சிறுவன் உயிரிழப்பு; 4 பேர் காயம்

டெல்லியில் ஆட்டோ ரிக்சா மற்றும் கார் மீது மற்றொரு கார் மோதியதில் 13 வயது சிறுவன் உயிரிழந்து உள்ளான். 4 பேர் காயமடைந்தனர்.
டெல்லியில் சாலை விபத்து: 13 வயது சிறுவன் உயிரிழப்பு; 4 பேர் காயம்
Published on

புதுடெல்லி,

டெல்லியின் பாபா பண்டா சிங் பகதூர் பறக்கும் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தியது. இதன்பின்பு மற்றொரு கார் மீதும் மோதியது.

இந்த சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் ஒரே குடும்பத்தினை சேர்ந்த பெற்றோர் உள்பட 4 பேர் காயமடைந்தனர். ஆட்டோ ஓட்டுனர் வாகர் ஆலம் மற்றும் ஜனக் பட், அவரது மனைவி கீதா பட் மற்றும் 18, 13 வயதுடைய அவர்களின் இரு மகன்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் 2வது மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளான். அந்த பெண்ணுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com