

மணாலி,
இமாசல பிரதேசத்தில் மணாலியில் இருந்து சிம்லா நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து மண்டி நகரில், சண்டிகார்-மணாலி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.
இந்த சம்பவத்தில் ஓட்டுனர் பலியானார். 34 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த நபர்களை உடனடியாக அருகிலுள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர். இந்த விபத்து பற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.