மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து: 4 பேர் பலி, 17 பேர் காயம்

மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து: 4 பேர் பலி, 17 பேர் காயம்
Published on

போபால்,

மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் இன்று காலை இரு சக்கர வாகனம், பயணிகளை ஏற்றி வந்த ஒரு தனியார் மினிபஸ் மற்றும் லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மற்றும் பஸ்சில் பயணித்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தானது மோவ் தெக்சில் பகுதியில் ஏற்பட்டது. இதில் காயமடைந்த 17 பேர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com