ராஜஸ்தானில் சாலை விபத்து: 3 பேர் பலி

இந்த விபத்தில் காயமடைந்த சர்பராஸ் என்ற இளைஞர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
ராஜஸ்தானில் சாலை விபத்து: 3 பேர் பலி
Published on

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் முஸ்தகீம் ஷா( 22), அப்துல் மாலிக்(18), சாஹில்(17) மற்றும் சர்பராஸ் (18). அந்த நான்கு பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அவர்கள் ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சந்த்வாஜி பகுதியில் உள்ள தாலா மோடு அருகே வந்துபோது திடீரென அந்த வழியாக வந்த பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. பேருந்து பைக் மீது மோதிய வேகத்தில், பைக்கில் இருந்த நான்கு இளைஞர்களும் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில்,

பேருந்து அதிவேகமாக வந்ததாகவும். மேலும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகவும் தெரிவித்தனர். பேருந்து மோதிய வேகத்தில், அது சாலையோர தடுப்பில் மோதி நின்றது. விபத்து நடந்த உடனே அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்

அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் மூன்று இளைஞர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சர்பராஸ் மட்டும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தை தொடர்ந்து அந்த பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com