உத்தரபிரதேச சாலை விபத்தில் 6 பக்தர்கள் பலி

உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
லக்னோ,
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சில பக்தர்கள் ஜீப்பில் உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது மிர்சாமுராத் அருகே ஜிடி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மீது மோதியது.
இதில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக மிர்சாமுராத் காவல் நிலைய அதிகாரி அஜய் ராஜ் வர்மார் கூறுகையில், மோதல் மிகவும் வலுவாக இருந்ததால் ஜீப்பின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்ததாகவும், சிக்கியவர்களை வெளியே எடுப்பதில் போலீசார் சற்று சிரமப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக கர்நாடக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.






