

மும்பை,
மராட்டிய மாநிலம் நந்தூர்பர் மாவட்டம் சகாதா நகரில் இருந்து அவுரங்காபாத்துக்கு அரசு பஸ் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. துலே மாவட்டம் நிம்குல் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் 2 வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் 9 பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்ததால் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது. பலியானவர்களில் 2 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவர். படுகாயம் அடைந்த 15 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.