ராஜஸ்தானில் சாலை விபத்து; 5 பேர் பலி


ராஜஸ்தானில் சாலை விபத்து; 5 பேர் பலி
x

ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தில் டிரக்கும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரக் டிரைவரை தேடி வருகின்றன.

இந்த விபத்து நேற்று இரவு அம்பாரி பகுதியில் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஹிமான்சு சிங் ரஜாவத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "சாலையின் தவறான பக்கத்தில் 5 பேருடன் சென்ற காரும் அதே வழியில் வந்த டிரக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிரக்கை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் டெல்வாரா ராஜ்சமந்தில் வசிக்கும் ஹிம்மத் காதிக் (32), உதய்பூரின் பெட்லாவில் வசிக்கும் பங்கஜ் நாகர்ச்சி (24), கரோல் காலனியில் வசிக்கும் கோபால் நாகர்ச்சி (27), சிசாமாவில் வசிக்கும் கவுரவ் ஜினாகர் (23) என அடையாளம் காணப்பட்டனர். 5வது நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை" என்றார்.

1 More update

Next Story