ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளை

ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளை
Published on

பெலகாவி:

பெலகாவி மாவட்டம் கோகாக் டவுன் லட்சுமிநகர் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ். இவர் ஒப்பந்ததாரர் ஆவார். இந்த நிலையில் பிரகாஷ் தனது குடும்பத்தினருடன் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமிக்கு சுற்றுலா சென்று இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள் பிரகாசின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அவரது வீட்டில் இருந்து ரூ.30 லட்சம் ரொக்கம், 130 கிராம் தங்கநகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டனர். பாதாமிக்கு சென்று விட்டு பிரகாஷ் வீட்டிற்கு வந்து பார்த்த போது திருட்டு நடந்தது தெரியவந்தது. திருட்டு சம்பவம் குறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் கோகாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com