அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கத்தி முனையில் டாக்டரிடம் பணம், செல்போன் கொள்ளை; உ.பி.யில் அவலம்

4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது என நகர வட்ட அதிகாரி ராகுல் பாண்டே கூறியுள்ளார்.
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கத்தி முனையில் டாக்டரிடம் பணம், செல்போன் கொள்ளை; உ.பி.யில் அவலம்
Published on: 

லக்னோ

உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் கத்தி முனையில் டாக்டரிடம் பணம், செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் புதாவுன் மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் ரத்த வங்கியில் இருந்த டாக்டர் விகாஸ் சர்மா என்பவரை 2 பேர் இன்று அணுகியுள்ளனர். அவரிடம் பேசியபடியே திடீரென கத்தியை எடுத்து காட்டி, அவரை மிரட்டி ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் அவருடைய செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

4 தனிப்படைகள்

இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் விகாஸ் உடனடியாக அவசர வார்டுக்கு சென்று மருத்துவமனை பணியாளரிடம் சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் அந்த மருத்துவமனைக்கு சென்று சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது என நகர வட்ட அதிகாரி ராகுல் பாண்டே கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com