

சண்டிகர்
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரப் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்குப் பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். பிராங்கோ தற்போது கோட்டயம் மாவட்டம் பலா கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
இதற்கிடையில், தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி, பேராயர் பிராங்கோ, கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட், பேராயர் மூலக்கல்லுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஜாமீனில் வந்த பிராங்கோ ஜலந்தர் வந்தார். அங்கு பஞ்சாபின் காவல்துறை அதிகாரிகளால் அழைத்துவரப்பட்ட பிஷப், ஊடகங்களிடம் பேசவில்லை. அவருக்கு அவரது ஆதரவாளர்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.