துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு: 14 கறுப்பு ஆடுகள் யார் என்று தெரியாமல் காங்கிரஸ் தவிப்பு

துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ரகசியமாக வாக்களிக்கும் முறை கையாளப்பட்டதால் எம்.பி.க்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதை கண்டுபிடிக்க இயலாது.
புதுடெல்லி,
துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதா கிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 'வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகளே கிடைத்தது.
சுதர்சன் ரெட்டிக்கு 315 வாக்குகள் கிடைக்கும் என்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்தியா கூட்டணி கட்சிகளின் 14 எம்.பி.க்கள் கட்சி மாறி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்தது தெரிய வந்துள்ளது.
அந்த 14 எம்.பி.க்களும் மனசாட்சிப்படி வாக்களித்திருப்பதாக மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு நன்றி தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் பா.ஜ.க. கூட்டணி மற்றும் நட்பு கட்சிகளின் எம்.பி.க்கள் இருப்பதாகவும் அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இது காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்களிடம் கடும் ஆவேசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள உள்ள எந்த கட்சி எம். பி.க்கள் கட்சி மாறி வாக்களித்தனர் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியா கூட்டணியில் உள்ள அந்த 14 எம்.பி. க்களையும் கறுப்பு ஆடுகள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். அதோடு அந்த 14 எம்.பி.க்கள் யார்? என்று கண்டுபிடிக்க ரகசிய விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ரகசியமாக வாக்களிக்கும் முறை கையாளப்பட்டதால் எம்.பி.க்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதை கண்டுபிடிக்க இயலாது. எம்.பி.க்கள் வாக்களிப்பதை கட்டுப்படுத்தும் அதிகாரம் கட்சி கொறடாக்களுக்கு இல்லை என்பதால் சுதந்திரமாக எம்.பி.க்கள் வாக்களிக்க முடியும் என்ற நிலை இருந்தது.
இந்த சுதந்திரத்தை பயன்படுத்தித்தான் இந்தியா கூட்டணியில் உள்ள 14 எம்.பி.க்கள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக மாறி இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் செல்லாத ஓட்டுகள் போட்ட 15 பேரும் இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் என்பது மேலும் நெருடலை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 3 கட்சிகளை அனைத்து தரப்பினரும் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். சிவசேனா, திரிணாமுல். காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் 4 கட்சி எம்.பி.க்கள்தான் தடம்புரண்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கருதப்படுகிறது.
ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்களால் இதை உறுதிப்படுத்த முடியவில்லை. இதனால் அவர்கள் துணை ஜனாதிபதி தேர்தலில் இந் வாக்கு திருட்டு நடந்து விட்டதாக புதிய சர்ச்சையை உருவாக்கி வருகிறார்கள். எதிர்க்கட்சி பேரம் பேசி ' பா.ஜ.க. வாக்குளை திருடி விட்டதாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறுகையில்,
'எங்கள் கட்சி எம்.பி.க்கள் 41 பேரும் சுதர்சன் ரெட்டிக்கே வாக்களித்து உள்ளனர். ஆனால் எங்கள் கூட்டணியில் உள்ள 2 கட்சி எம்.பி.க்கள்தான் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக மாறி உள்ளனர்.
எனக்கு ஆம் ஆத்மி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியை சேர்ந்த ஒரு பெண் எம்.பி. வெளிப்படையாகவே பா.ஜ.க.வை வை ஆதரித்தார். அதுபோல அந்த கட்சியில் உள்ள 4 எம்.பி.க்களும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் இருந்தது எனக்கு தெரியும்.
நேற்று நான் சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் வாக்கு பெறுவதற்காக இந்தியா கூட்டணி எம். பி.க்களுக்கு தலா ரூ.15 முதல் ரூ.20 கோடி வரை பேரம் பேசியதாக தெரிய வந்தது.
மக்கள் அவர்களை நம்பிதான் ஓட்டுபோட்டு தேர்வு செய்தார்கள். ஆனால் மக்களின் அந்த நம்பிக்கையை இந்தியா கூட்டணி எம்.பி.க்களில் சிலர் விலை பேசி விற்றுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை விலை கொடுத்து வாங்க முடியும் என்பதை பா.ஜ.க. மீண்டும். நிரூபித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அபிஷேக் பானர்ஜி எம் பி.யின் இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது.






