யோகியை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு இந்து அமைப்பு அறிவிப்பால் பரபரப்பு

யோகி ஆதித்யநாத்தை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என இந்து அமைப்பு அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யோகியை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு இந்து அமைப்பு அறிவிப்பால் பரபரப்பு
Published on

லக்னோ,

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில மந்திரியுமான சித்து தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்டார். ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளராக செயல்பட்ட சித்து ராம்கஞ்ச் மண்டியில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் மோடியையும், உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து இந்து யுவவாகினி அமைப்பு சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளது.

யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த பஞ்சாப் மந்திரி சித்துவின் தலையை துண்டித்து கொண்டு வருவோருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து யுவவாகினி ஆக்ரா பிரிவு தலைவர் தருண் சிங் பேசுகையில், சித்து பாகிஸ்தானை புகழ்கிறார். சொந்த நாட்டுக்கு எதிராக பேசுகிறார். இது மன்னிக்க முடியாதது. அவர் பாகிஸ்தானுக்கு போய் விடட்டும் அல்லது நாங்கள் அவரை இந்தியாவில் வாழ விட மாட்டோம் என குறிப்பிட்டார்.

இந்து யுவவாகினி அமைப்பு 15 வருடங்களுக்கு முன்னதாக யோகி ஆதித்யநாத்தால் தொடங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com