நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி வருமானவரி ‘ரீபண்ட்’

நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி வருமானவரி ரீபண்ட் ஆகி இருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி வருமானவரி ‘ரீபண்ட்’
Published on

புதுடெல்லி,

நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அக்டோபர் 25-ந் தேதிவரை, வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 952 கோடியை திரும்ப வழங்கி (ரீபண்ட்) இருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

இதில், தனிநபர் வரி செலுத்தும் 76 லட்சத்து 21 ஆயிரத்து 956 பேருக்கு ரூ.27 ஆயிரத்து 965 கோடியும், கார்ப்பரேட் வரி செலுத்தும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 424 பேருக்கு ரூ.74 ஆயிரத்து 987 கோடியும் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com