10 கோடி விவசாயி வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் கோடி பணபரிமாற்றம்; பிரதமர் மோடி பேச்சு

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் கோடி பணபரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
10 கோடி விவசாயி வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் கோடி பணபரிமாற்றம்; பிரதமர் மோடி பேச்சு
Published on

புதுடெல்லி,

ஜனசங்க தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியே பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை ஒரு சிறந்த நாடாகவும் மற்றும் சமூகம் ஆகவும் உருவாக்குவதில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய்ஜி மேற்கொண்ட பங்கு பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதற்கு முன்பிருந்த அரசுகள் புரிந்து கொள்ள சிக்கலான வலை பின்னல்போன்ற உறுதிமொழியையும், சட்டங்களையும் அளித்தன. அவை விவசாயிகளாலோ அல்லது தொழிலாளர்களாலோ புரிந்து கொள்ளவே முடியவில்லை.

ஆனால், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த சூழ்நிலையை தொடர்ந்து மாற்ற முயற்சித்தது. விவசாயிகளின் நலனுக்காக திருத்தங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது

கடந்த சில ஆண்டுகளில், விவசாயிகளை வங்கிகளுடன் இணைக்க முழு முயற்சிகளை எடுத்தது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் கோடி பணபரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

கிசான் கிரெடிட் கார்டுகளை அதிக அளவிலான விவசாயிகளுக்கு வழங்கும் முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதனால் அவர்களுக்கு கடன்கள் எளிதில் கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com