வீட்டில் இருந்த ரூ.1¼ லட்சம் தங்கநகைகள், பணம் திருட்டு

உப்பள்ளி டவுன் அருகே, கதவின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த ரூ.1¼ லட்சம் தங்கநகைகள், பணத்தை திருடி மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
வீட்டில் இருந்த ரூ.1¼ லட்சம் தங்கநகைகள், பணம் திருட்டு
Published on

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பகுதியில் வசித்து வருபவர் கிரண் அர்கசாலி. இவர் கணேஷ் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

அப்போது அவரது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அலமாரியில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம், ரூ.1 லட்சம் தங்கநகைகளை திருடிவிட்டு தப்பி சென்றனர். இந்த நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த கிரண் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த தங்கநகைகள் மற்றும் பணம் திருடு போய் இருந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவர் உடனடியாக பழைய உப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், வீட்டிற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com