ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி - அதிரடி சோதனையில் அம்பலம்

அரசு அதிகாரி ஒருவருக்கு ரூ.100 கோடி அளவில் சொத்துக்கள் இருப்பதாக, அதிரடி சோதனையில் அம்பலமாகி உள்ளது.
ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி - அதிரடி சோதனையில் அம்பலம்
Published on

ஜபல்பூர்,

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூரில் பொது சுகாதார பொறியியல் துறையில் உட்கோட்ட அதிகாரியாக இருந்தவர் சுரேஷ் உபாத்யாய். இவர் வருமானத்துக்கு மீறி கணக்கிலடங்கா சொத்துகளை குவித்துள்ளதாக கிடைத்த உளவு தகவலையடுத்து, இவருக்கு சொந்தமான 4 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவரது குடும்பத்துக்கு 70 ஏக்கர் நிலம் இருப்பது தெரிய வந்தது. முக்கிய இடங்களில் உள்ள வீட்டு மனைகளும் இதில் அடங்கும். 2 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் பணம் ஆகியவையும் சோதனையில் சிக்கின. இவரது குடும்பத்துக்கு ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமும், 2 சொகுசு கார்களும் சொந்தமாக இருப்பது தெரியவந்துள்ளது. இவரது உத்தேச சொத்து மதிப்பு ரூ.100 கோடியை தாண்டும் என போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். சரியான சொத்து மதிப்பை கணக்கிடுவதற்கு சிறிது காலம் பிடிக்கும் என அவர்கள் தெரிவித்தனர். சுரேஷ் உபாத்யாய், அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது. இது மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com