மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

மேகதாது திட்டத்திற்கு கர்நாடக பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் 66 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டம் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அமைக்க வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மத்திய அரசு மேகதாது திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்காமல் உள்ளது. இந்த நிலையில், கர்நாடக சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று தொடங்கியது.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, 2022-23-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மேகதாது திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com