ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ரூ.14 கோடி - அமெரிக்கா வாழ் தமிழர்கள் வழங்கினார்கள்

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் ரூ.14 கோடி வழங்கினார்கள்.
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ரூ.14 கோடி - அமெரிக்கா வாழ் தமிழர்கள் வழங்கினார்கள்
Published on

ஹூஸ்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை அமைப்பதற்காக ஹூஸ்டன் தமிழ் கல்வி இருக்கை என்ற அமைப்பு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பினர்கள் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன், டாக்டர் எஸ்.ஜி.அப்பன், சொக்கலிங்கம் நாராயணன், பெருமாள் அண்ணாமலை, நாகமாணிக்கம் கணேசன், துபில் வி.நரசிம்மன், டாக்டர் திருவேங்கடம் ஆறுமுகம் ஆகியோர் ஹூஸ்டன் மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளில் வசிக்கும் தமிழர்களிடம் நிதி திரட்டினர்.

இதன்மூலம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.14 கோடி (2 மில்லியன் அமெரிக்க டாலர்) திரட்டி ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கல்வி இருக்கை அமைப்பதற்காக வழங்கினர். இதன்மூலம் பழமையான தமிழ் மொழி பற்றியும், தமிழ் கலாசாரம் பற்றியும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் கற்க முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com