அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.16 கோடி மருந்து செலுத்தப்பட்டது

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.16 கோடி மருந்து செலுத்தப்பட்டது. இன்று அவள் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்புகிறாள்.
சிறுமி தேரா காமத்
சிறுமி தேரா காமத்
Published on

ரூ.16 கோடி மருந்து

மும்பையை சேர்ந்த 6 மாத பெண் குழந்தை தேரா காமத் முதுகெலும்பு தசைநார் சிதைவு என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாள். நரம்பு செல்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிற்பது, நடப்பது மற்றும் உடலை அசைப்பது மிகவும் கடினமாகும். எனவே இதற்காக மும்பை இந்துஜா ஆஸ்பத்திரியில் குழந்தை தேரா காமத் சிகிச்சை பெற்று வருகிறாள்.குழந்தையை நோயில் இருந்து மீட்டெடுக்க அவளுக்கு அமெரிக்காவில் இருந்து ஜோல்ஜென்ஸ்மா என்ற மருந்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த மருந்தின் விலை ரூ.16 கோடி ஆகும்.

இன்று வீடு திரும்புகிறாள்

இந்தநிலையில் மத்திய அரசு அந்த மருந்துக்கான இறக்குமதி வரியை மனிதநேய அடிப்படையில் ரத்து செய்தது. இதனால் மருந்தின் மதிப்பில் ரூ.6 கோடி குறைந்தது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல தரப்பில் இருந்து திரட்டிய பணத்தில் அந்த மருந்தை வாங்கினர். இதில் குழந்தைக்கு நேற்று அரியவகை நோய்க்கான மருந்து செலுத்தப்பட்டது. அவள் இன்று வீடு திரும்பலாம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com