உ.பி.யில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைக்க ரூ.1,700 கோடி ஒப்புதல்: ஆதித்யநாத்

நீதி துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் மாநில அரசின் முயற்சிகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சுட்டிக்காட்டினார்.
உ.பி.யில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைக்க ரூ.1,700 கோடி ஒப்புதல்: ஆதித்யநாத்
Published on

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் ஐகோர்ட்டில் புதிய வழக்கறிஞர் அறை மற்றும் வாகனங்களை நிறுத்தும் கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பங்கேற்று அதனை திறந்து வைத்துள்ளார். இதில், 2,300-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என மிக பெரிய அளவில் வாகன நிறுத்தும் வசதிகளையும் கொண்டுள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, நீதி துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் மாநில அரசின் முயற்சிகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சுட்டிக்காட்டினார்.

அவர் நிகழச்சியில் பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, 10 மாவட்டங்களில், அவர்களுக்கு என்று தனியாக சொந்த கோர்ட்டுகள் எதுவும் இல்லை. ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில், வாகன நிறுத்தும் வசதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கான அறைகள் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம் என்றார்.

நாங்கள் முன்பே ஒப்புதல் வாங்கி, அதன் தொடர்ச்சியாக 7 மாவட்டங்களுக்கு ரூ.1,700 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து விட்டோம் என்றும் அவர் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com