பொதுமக்களிடையே உள்ள ரூ.2,000 நோட்டுகள் எவ்வளவு ? ரிசர்வ் வங்கி தகவல்


பொதுமக்களிடையே உள்ள ரூ.2,000  நோட்டுகள் எவ்வளவு ? ரிசர்வ் வங்கி தகவல்
x
தினத்தந்தி 3 Sept 2024 3:19 AM IST (Updated: 3 Sept 2024 9:34 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2,000 நோட்டுகளை குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மும்பை,

ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக கடந்த ஆண்டு மே 19-ந் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அந்த நோட்டுகளை வங்கிக்கணக்கில் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது.

அச்சமயத்தில், ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 30-ந் தேதி நிலவரப்படி, 97.96 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து விட்டன.

இன்னும் ரூ.7 ஆயிரத்து 261 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே பொதுமக்களிடையே இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நோட்டுகளை குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளது.

1 More update

Next Story