பெங்களூருவில் சாலைப் பணிகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி செலவு - பசவராஜ் பொம்மை தகவல்

பெங்களூருவில் சாலைகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடிக்கு நிர்வாக ரீதியான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் சாலைப் பணிகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி செலவு - பசவராஜ் பொம்மை தகவல்
Published on

பெங்களூரு,

கர்நாடக மேல்-சபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் பி.ஆர்.ரமேஷ், பெங்களூருவில் அமைக்கப்படும் சாலைகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை புதிதாக சாலைகள் அமைத்தல், சாலைகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.20 ஆயிரத்து 60 கோடிக்கு நிர்வாக ரீதியான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீர்மிகு நகர (ஸ்மார்ட்சிட்டி) திட்டத்தின் கீழ் 36 சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. டெண்டர் சூர் திட்டத்தின் கீழ் ரூ.436 கோடி செலவில் 46 சாலைகள் தரம் உயர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன.

புதிய திட்டங்களின் கீழ் சாலை பணிகள் எப்போது தொடங்கப்பட்டது, திட்ட செலவு, அது முடிவடையும்போது அதிகரிக்கும் திட்ட செலவு, ஒப்பந்ததாரரின் பெயர், அதனை மேற்பார்வையிட்ட என்ஜினீயர் பெயர், சாலை அமைக்கப்பட்ட பிறகு ஒப்பந்ததாரர் அந்த சாலையை எத்தனை ஆண்டுகள் பராமரித்துள்ளார், எத்தனை முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com