தமிழகத்தில் ரூ.22,800 கோடி ரெயில்வே திட்டங்களுக்கு அனுமதி - மத்திய மந்திரி தகவல்


தமிழகத்தில் ரூ.22,800 கோடி ரெயில்வே திட்டங்களுக்கு அனுமதி - மத்திய மந்திரி தகவல்
x

சென்னை பறக்கும் ரெயில் - மெட்ரோ ரெயில் இணைப்புக்கு கொள்கை அளவில் ரெயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி ரூ.22,800 கோடி 15 ரெயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1,700 கி.மீ தூரத்தில் மார்ச் 2025 வரை 665 கி.மீ பணிகள் ரூ.7,591 கோடி செலவில் நிறைவு பெற்றுள்ளது. 9 வழித்தடங்கள், 3 அகலப்பாதைகள் மாற்றம், 3 இரட்டை வழித்தடம் இதில் அடங்கும். 2019-14ல் ரூ.879 கோடியாக இருந்த நிதி 2025-26-ல் ரூ.6,526 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தி.மலை - திண்டிவனம், மொரப்பூர் - தருமபுரி, மன்னார்குடி - பட்டுக்கோட்டை பணிகள் தாமதம் ஆகி உள்ளது. நிலம் கையகப்படுத்துவதை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு தேவை. ரெயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நிலம் கையகம் செய்வதில் தாமதம் இதற்கு காரணம்.

சென்னை பறக்கும் ரெயில் - மெட்ரோ ரெயில் இணைப்புக்கு கொள்கை அளவில் ரெயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. சென்னை பறக்கும் ரெயில் சேவையை மாநில அரசிடம் ஒப்படைக்கவும் ஒப்புதல் தந்தது ரெயில்வே வாரியம் என எம்.பி.ஆர்.தர்மர் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.

1 More update

Next Story