மங்களூரு விமான நிலையத்தில் ரூ.3¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து மங்களூருவுக்கு கடத்திய ரூ.3¾ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேரள பயணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மங்களூரு விமான நிலையத்தில் ரூ.3¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
Published on

மங்களூரு:

தட்சிண கன்னடா மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து போதைப்பொருள், தங்கம் கடத்தலை தடுக்க விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து விமானம் ஒன்று மங்களூருவுக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த பயணி ஒருவர் தனது உடைமைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.32.72 லட்சம் மதிப்பிலான 624 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை சுங்கத்துறை அதிகாரிகள் பஜ்பே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com