

பனாஜி,
17-வது மக்களவைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களில் வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வருமானவரித் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூருவில் இருந்து ஷிமேகாவிற்கு சென்ற காரை நிறுத்தி சேதனையிட்டனர். அதில், ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை பறிமுதல் செய்தனர். மேலும், கார் டயரில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ரூ.2 ஆயிரம் கட்டுகள் கொண்ட ரூ.2.30 கோடியையும் பறிமுதல் செய்துள்ளனர்.