உ.பி.யில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு..!

மேலும் 12-ம் வகுப்பு முடித்த பெண்​களுக்கு மடிக்​கணினி வழங்​கப்​படும் என்​றும் அகிலேஷ் யாதவ் அறி​வித்​துள்​ளார்.
அகிலேஷ் யாதவ்
Published on

புதுடெல்லி,

உத்தரப் பிரதேசத்​தில் மொத்​தம் 403 உறுப்பினர்களை கொண்ட சட்​டப்​பேர​வைக்கு அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்​தில் தேர்​தல் நடக்க உள்​ளது. அங்கு தேர்​தல்களம் இப்​போதே சூடு​பிடிக்​கத் தொடங்​கி​யுள்​ளது.

ஆண்​டுக்கு ரூ.40,000

இந்​நிலை​யில், இந்​தத் தேர்​தலில் வெற்​றிப் பெற்று சமாஜ்​வாதி கட்சி ஆட்​சிக்கு வந்​தால், 'ஸ்ரீ சம்​மான் சம்​ருத்தி யோஜ​னா' (பெண்களுக்​கான கண்​ணி​யம் மற்​றும் செழிப்​புத் திட்​டம்) என்​கிற திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்​றும், இதன் கீழ் பெண்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.40,000 வழங்​கப்​படும் என்​றும் அக்​கட்சி அறிவித்துள்​ளது. மேலும் 12-ம் வகுப்பு முடித்த பெண்​களுக்கு மடிக்​கணினி வழங்​கப்​படும் என்​றும் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் கூறும்​போது, ''ஸ்ரீ சம்மான் சம்​ருத்தி யோஜனா என்​பது, மக்​கள் தொகை​யில் 50% பங்கு வகிக்​கும் பெண்​களுக்கு முழு​மை​யான சுதந்​திரத்தை வழங்கு​வதற்​கான ஒரு உறு​தி​மொழி. இந்த தொகை எதிர்காலத்தில் மேலும் அதி​கரிக்​கப்​படும்'' என்​றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com