சித்து தலைக்கு ரூ.5 லட்சம் : இந்து அமைப்பு அறிவிப்பு

பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டித்தழுவிய சித்து தலைக்கு ரூ.5 லட்சம் இந்து அமைப்பு அறிவித்துள்ளது.
சித்து தலைக்கு ரூ.5 லட்சம் : இந்து அமைப்பு அறிவிப்பு
Published on

ஆக்ரா,

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநிலத்தில் மந்திரியாக இருக்கிறார். அவர், சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டித்தழுவினார். இந்த செயலுக்கு பஞ்சாப் முதல்மந்திரி அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில், சித்து தலைக்கு ஒரு இந்து அமைப்பு ரூ.5 லட்சம் விலை நிர்ணயித்துள்ளது. ராஷ்டிரீய பஜ்ரங்தள் என்ற அமைப்பின் மாவட்ட தலைவர் சஞ்சய் ஜாட் என்பவர்தான், இந்த அறிவிப்பை ஒரு வீடியோவில் வெளியிட்டுள்ளார்.

ரூ.5 லட்சம் தொகை எழுதப்பட்ட காசோலையையும் அவர் வீடியோவில் காண்பித்தார். சித்துவை தேச துரோகி என்று குறிப்பிட்ட அவர், சித்துவின் செயலால் வேதனை அடைந்துள்ளதாக கூறினார். இந்த வீடியோ காட்சி பெரிய அளவில் பரவி உள்ளது. இருப்பினும், தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com