புதுச்சேரி மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வெள்ள நிவாரணம்...!

புதுச்சேரியில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் மழை வெள்ள நிவாரணமாக ரூ.5000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
புதுச்சேரி மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வெள்ள நிவாரணம்...!
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகள், குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்து உள்ளன.

புதுச்சேரியில் சிவப்பு கார்டுகளுக்கு வெள்ள நிவாரண தொகையாக ரூ.5000 வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது மஞ்சள் கார்டுகளுக்கும் நிவாரணம் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதன்படி, புதுச்சேரியில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கும் மழை வெள்ள நிவாரணமாக ரூ.5000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com