ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்: கொரோனாகால நிதி அறிவிப்பு

ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு முதல் மந்திரி தலா ரூ.5 ஆயிரம் கொரோனா நிதியுதவி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்: கொரோனாகால நிதி அறிவிப்பு
Published on

ஜெய்ப்பூர்,

நாட்டில் கொரோனா 2வது அலையில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 7ந்தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி, காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மாலை 4 மணிவரை ஒவ்வொரு நாளும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்.

எனினும், வார இறுதி நாட்களான வெள்ளி கிழமை மாலை முதல் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்நிலையில், முதல் மந்திரி அசோக் கெலாட் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் கொரோனா நிதியுதவி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அரசின் இந்த முடிவால், நிதி நெருக்கடியில் உள்ள மற்றும் தேவையாக உள்ள கலைஞர்கள் நிவாரணம் பெறுவார்கள் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com