ஐதராபாத்தில் ரூ.7,926 கோடி வங்கி மோசடி செய்த நிறுவனம் - சி.பி.ஐ. வழக்குப்பதிவு

ஐதராபாத்தில் ரூ.7 ஆயிரத்து 926 கோடி வங்கி கடன் மோசடி செய்த நிறுவனத்தின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து உள்ளது.
ஐதராபாத்தில் ரூ.7,926 கோடி வங்கி மோசடி செய்த நிறுவனம் - சி.பி.ஐ. வழக்குப்பதிவு
Published on

புதுடெல்லி,

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கும், அவரது உறவினர் மெகுல் சோக்சி ரூ.7 ஆயிரத்து 80 கோடி அளவுக்கு வங்கி மோசடி செய்து விட்டு வெளநாடு தப்பிச் சென்றனர்.

இந்த நிலையில், அதை விடவும் பெரியளவில் ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று வங்கி மோசடியில் ஈடுபட்டு உள்ளது வெளச்சத்துக்கு வந்துள்ளது. கனரா வங்கியை தலைமையிலான வங்கி கூட்டமைப்பில் உள்ள வங்கிகளல் ரூ.7 ஆயிரத்து 926 கோடி அளவுக்கு ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிரான்ஸ்ட்ராய் என்ற நிறுவனம் தான் கடன்களை வாங்கி மோசடியில் ஈடுபட்டு உள்ளது.

இதுதொடர்பாக வங்கி கூட்டமைப்பு கொடுத்த புகாரின் பேரில், டிரான்ஸ்ட்ராய் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான செருகுரி ஸ்ரீதர், கூடுதல் இயக்குனர்கள் ராயபதி சாம்பசிவா, அக்கினெனி சதீஸ் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து உள்ளது.

கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஐதராபாத் மற்றும் குண்டூரில் உளள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களல் அதிரடி சோதனை நடத்தினார்கள. இந்த சோதனையின் போது, கடன் மோசடி தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com