

புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி ரூ.971 கோடியில் பிரமாண்டமான புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு கடந்த மாதம் 10-ந் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த நாடாளுமன்ற கட்டிடம் சென்டிரல் விஸ்டா என்னும் மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கட்டப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணி வெற்றிகரமாக நேற்று தொடங்கி விட்டது. இந்த பணி அடுத்த ஆண்டு நிறைவு பெறும்.
அடுத்த ஆண்டு, நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறபோது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு எண்ணி இருப்பது குறிப்பிடத்தக்கது.