வெங்கையா நாயுடுவை விமர்சனம் செய்து பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட எம்.பிக்கு அனைத்து எம்.பிக்களும் கண்டனம்

வெங்கையா நாயுடுவை விமர்சனம் செய்து பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட எம்.பிக்கு அனைத்து எம்.பிக்களும் கண்டனம் தெரிவித்தனர்.
வெங்கையா நாயுடுவை விமர்சனம் செய்து பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட எம்.பிக்கு அனைத்து எம்.பிக்களும் கண்டனம்
Published on

புதுடெல்லி,

மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை விமர்சனம் செய்து எம்.பி ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்துக்கு கட்சி பாகுபாடின்றி ஒரே குரலில் கண்டனம் தெரிவித்த எம்.பிக்கள், சம்பந்தப்பட்ட எம்.பி வெங்கையா நாயுடுவிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால், வெங்கையா நாயுடுவை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவு செய்த எம்.பியின் பெயரை யாரும் வெளியிடவில்லை.

மாநிலங்களவை இன்று கூடியதும், இந்த விவகாரத்தை எழுப்பிய சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்.பி நரேஷ் அகர்வால், அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் அவைத்தலைவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். எனினும், ஒரு எம்.பி தனது பேஸ்புக்கில், அவைத்தலைவர் பாரபட்சமாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார். உறுப்பினரின் இந்த கருத்து, தேவையற்றதும் அவைக்கு உதவாததும் ஆகும். அவைத்தலைவர் குறித்து கருத்து தெரிவித்த எம்.பி மன்னிப்புக் கோர வேண்டும் என்றார்.

பாரதீய ஜனதா கட்சி எம்.பி புபேந்திர் யாதவ் கூறும் போது, அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இது போன்று சமூக வலைதளங்களில் பதிவு செய்வது அவைத்தலைவர் என்ற பதவியை இழிவுபடுத்தும் செயல் ஆகும் என்றார். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும் போது, இது போன்ற செயல் கண்டனத்திற்குரியது என்றார். உறுப்பினர்கள் இந்த கருத்தை தெரிவிக்கும் போது, வெங்கையா நாயுடு தனது இருக்கையில் இருந்த போதும், எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com