ரூ.1.57 கோடி மணல் ஊழல்: பீகார் முன்னாள் மந்திரிக்கு 5 ஆண்டு ஜெயில் - 22 ஆண்டுகளாக நடந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு

ரூ.1.57 கோடி மணல் ஊழல் புகாரில், 22 ஆண்டுகளாக நடந்த வழக்கில் பீகார் முன்னாள் மந்திரிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ரூ.1.57 கோடி மணல் ஊழல்: பீகார் முன்னாள் மந்திரிக்கு 5 ஆண்டு ஜெயில் - 22 ஆண்டுகளாக நடந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
Published on

ராஞ்சி,

கடந்த 1997-ம் ஆண்டு முறைகேடாக மணலை விற்று ரூ.1 கோடியே 57 லட்சம் ஊழல் செய்ததாக பீகார் முன்னாள் மந்திரி இலியாஸ் ஹூசைன் உள்பட 6 அதிகாரிகள் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் மீதான வழக்கு சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வந்தது. 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் நீதிபதி ஏ.கே.மிஸ்ரா தீர்ப்பு கூறினார்.

அதில் மணல் ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் மந்திரி இலியாஸ் ஹூசைனுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதே போன்று ஹூசைனின் செயலாளர் சகாபுதீன் பாகிக், பீகார் போக்குவரத்து துறை முன்னாள் இயக்குனர் கேடர் பஸ்வான், துணை இயக்குனர் முஸ்தபா அகமது, நிர்வாக என்ஜினீயர் ராமானந்த்ராம், பிரிவு அதிகாரி ஷோபாசின்கா மற்றும் போக்குவரத்து அதிகாரி டி.என்.சிங் ஆகியோருக்கும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இதேபோல் மற்றொரு ஊழல் வழக்கில் முன்னாள் மந்திரி இலியாஸ் ஹூசைனுக்கு கடந்த 2018-ம் ஆண்டு சி.பி.ஐ. கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பினால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com