ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு ஒவ்வொரு இந்தியரையும் புண்படுத்தி உள்ளது: ராகுல் காந்தி

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு ஒவ்வொரு இந்தியரையும் புண்படுத்தி உள்ளது என ராகுல் காந்தி இன்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு ஒவ்வொரு இந்தியரையும் புண்படுத்தி உள்ளது: ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

பீகாரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொண்டர்கள் கூட்டத்தின் முன், ராணுவத்தினை விட மிக வேகமுடன் ராணுவ வீரர்களை நாம் தயார் செய்து விடுவோம் என நேற்று பேசினார்.

ராணுவ வீரர்களை தயார் செய்ய 6 முதல் 7 மாதங்கள் வரை ராணுவத்துக்கு தேவைப்படும். ஆனால் 3 நாட்களில் ராணுவ வீரர்களை நாம் தயார் செய்து விடுவோம். இது நம்முடைய திறன். நாட்டுக்கு அதுபோன்ற சூழல் ஏற்பட்டால் ஸ்வயம்சேவக் முன்னால் நிற்க தயாராக இருக்கிறது. இதற்கு அரசியலமைப்பும் அனுமதி அளித்துள்ளது என கூறினார்.

அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பகவத்தின் இந்த பேச்சு ஒவ்வொரு இந்தியரையும் புண்படுத்தியுள்ளது. ஏனெனில் நமது நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை இது அவமரியாதை செய்துள்ளது.

ஒவ்வொரு வீரரும் வணக்கம் செலுத்தும் நமது கொடியை அவமதித்துள்ளது. உயிரிழந்த நமது வீரர்கள் மற்றும் நம்முடைய ராணுவத்தினரை அவமரியாதை செய்துள்ளார் பகவத். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com