கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆட்சி நடத்தி வருகிறது; சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆட்சி நடத்தி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆட்சி நடத்தி வருகிறது; சித்தராமையா குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், காந்தி நகர் சட்டசபை தொகுதியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார்.

இதன்பின்பு அவர் பேசும்போது, பா.ஜ.க. பொய்களின் தொழிற்சாலை. அவர்கள் பொய்களை மட்டுமே உற்பத்தி செய்து, அவற்றை சந்தைப்படுத்தி வருகின்றனர். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தலீபான் போன்றவர்கள். மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பேசியுள்ளார்.

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமூடியை அணிந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தங்களை தேசப்பற்றாளர்கள் என கூறி கொள்கின்றனர். அப்படியெனில், இந்திய சுதந்திரத்திற்காக உயிரிழந்த ஒரு தலைவரின் பெயரை அவர்கள் குறிப்பிட வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com