அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தமே தீர்வு - கட்கரி

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் சித்தாந்தமே தீர்வுதரும் என்றார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தமே தீர்வு - கட்கரி
Published on

மும்பை

புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் ரமேஷ் மேத்தா ஆர் எஸ் எஸ் இயக்கம் பற்றி எழுதி, லோட்டஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகத்தை வெளியிட்டு பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்: சமூகப் பொருளாதார சமத்துவத்திற்கான ஆர் எஸ் எஸ்சின் சித்தாந்தம், தேசியவாத சித்தாந்தம், அதன் கல்வி, உடல் நலம் ஆகியவற்றிற்கான தீர்வுகள் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கின்றன.

மார்க்க்சியமும், சோஷலிசமும் காலப்போக்கில் தோல்வி கண்டு விட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆர் எஸ் எஸ்சின் சமூகப் பொருளாதார தத்துவம் உலகத்திற்கு வழிகாட்டலாம் என்று கூறிய அவர் இயக்கத்தின் மீதான தவறான பிரச்சாரங்களை அதன் உறுதிப்பாட்டினாலும், அர்ப்பணிப்பினாலும் தாங்கி நின்றுள்ளது என்றார் அவர்.

ஆர் எஸ் எஸ் இயக்கத்தினால் கல்வி, மருத்துவம், தனிநபர் முன்னேற்றம் ஆகிய துறைகளில் செய்யப்பட்டுள்ள நல்ல காரியங்கள் மக்களிடம் சொல்லப்பட வேண்டும். அதன் தேசப்பற்றும் கூட எடுத்துச் சொல்லப்பட வேண்டும்; இந்த இயக்கத்தைப் பற்றிய சமூகத்தின் தவறான கருத்தை மாற்ற வேண்டும் என்றார் அவர்.

ஆர் எஸ் எஸ்சின் இந்துத்வாவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு அடங்கியுள்ளது என்றார் கட்கரி.

உத்தரபிரதேச ஆளுநர் ராம் நாயக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com