பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சுட்டுக்கொலை
Published on

பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே உள்ள கைலாஷ் நகர் பகுதியில் இன்று காலை 7.45 மணியளவில் ஆர்.எஸ்.எஸ் இயக்க பிரமுகர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தினசரி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் வீடு திரும்பி கொண்டு இருந்த ரவீந்தர் கோசாய்( வயது 60) என்ற அவரை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட கோசாய், பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகியாகவும் உள்ளார். ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com