ஆந்திராவில் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்: 20 பேர் காயம் - 2 பேர் கவலைக்கிடம்


ஆந்திராவில் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்: 20 பேர் காயம் - 2 பேர் கவலைக்கிடம்
x

ஆந்திராவில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 20 பேர் காயமடைந்தனர்.

புலிவெந்துலா,

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே புலிவெந்தலா நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக புலிவெந்துலா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து நடந்த பகுதியின் அருகே வசிக்கும் பொதுமக்கள் உதவியுடன் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story