அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிவடைந்து உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிவு
Published on

மும்பை,

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் இடையேயான சந்திப்பினை அடுத்த மற்ற கரன்சிகளுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது.

இது இந்திய ரூபாயின் மதிப்பினையும் பாதித்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ.68.97ஆக உள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 8 காசுகள் குறைந்து ரூ.68.94ஆக இருந்தது. உள்ளூர் சந்தைகளில் புதிய உச்சத்தினை புள்ளிகள் எட்டிய நிலையிலும், இறக்குமதியாளர்களிடம் இருந்து தொடர்ச்சியான டாலர் தேவைக்கான நெருக்கடியால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து இருந்தது. அந்நிலை இன்றும் நீடித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com