அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 37 பைசாக்கள் குறைவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 37 பைசாக்கள் குறைந்து காணப்பட்டது. #USD #IndianRupee
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 37 பைசாக்கள் குறைவு
Published on

மும்பை,

அமெரிக்க கரன்சியான டாலரின் தேவை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் சர்வதேச அளவில் பெருமளவிலான கரன்சிகளுக்கு எதிரான டாலர் மதிப்பு அதிகரித்து காணப்பட்டது.

இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 37 பைசாக்கள் குறைந்து காணப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுடனான சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்று அறிவித்ததும், அமெரிக்க டாலர் மதிப்பு சந்தையில் உயர்வதற்கு காரணம் ஆக அமைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 5 பைசாக்கள் அதிகரித்து ரூ.67.08 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 37 பைசாக்கள் குறைந்து காணப்பட்டது. இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.45 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com