

மும்பை,
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வெள்ளி கிழமை முடிவடைந்த ரூ.71.64 என்ற அளவில் இருந்து இன்று 30 பைசாக்கள் குறைந்து ரூ.71.94 ஆக உள்ளது.
எனினும், கச்சா எண்ணெய் விலை குறைவானது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சற்று கட்டுப்படுத்தியது என வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2,592 பேர் பலியாகியுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தொடர்ந்து அந்த அச்சத்திலேயே உள்ளனர் என்று கூறப்படுகிறது.