இந்தியா உடனான எங்களுடைய நட்புறவை பாகிஸ்தான் உடனான உறவுடன் ஒப்பிட முடியாது - ரஷியா திட்டவட்டம்

இந்தியா உடனான எங்களுடைய நட்புறவு நிகரற்றது, பாகிஸ்தான் உடனான எங்களுடைய உறவுடன் அதனை ஒப்பிட முடியாது என ரஷியா கூறி உள்ளது.
இந்தியா உடனான எங்களுடைய நட்புறவை பாகிஸ்தான் உடனான உறவுடன் ஒப்பிட முடியாது - ரஷியா திட்டவட்டம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவை பராமரிக்கும் ரஷியா பாகிஸ்தானுடன் இணைந்து ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டது விமர்சனத்திற்கு உள்ளாகியது. விளாடிவோஸ்டோக்கில் ரஷியா மற்றும் இந்தியா முப்படைகளின் பயிற்சி முடிந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷியாவின் தூதர் நிகோலோய், இந்தியா உடனான எங்களுடைய நட்புறவு என்பது நிகரற்றது, பாகிஸ்தான் உடன் நாங்கள் இருதரப்பு உறவு மட்டுமே கொண்டு உள்ளோம், என்றார். பாகிஸ்தானில் இருதரப்பு ராணுவ ஒத்திகை நடைபெற்றது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய நிகோலோய், இந்தியாவுடன் ரஷியா கொண்டு உள்ள நட்புறவை, பாகிஸ்தான் உடன் பராமரிக்கும் உறவுடன் ஒப்பிட முடியாது, என்றார்.

இந்தே-பசிபிக்கில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் அமெரிக்கா நாற்புரம் ஒருங்கிணைந்த செயல்பாடு தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் அனைத்து தரப்பிற்கும் இடமளிப்பதற்கு ரஷியா எப்போதுமே ஆதரவாகவே உள்ளது என குறிப்பிட்டார்.

அனைத்து நாடுகள் இடையேயும் வெளிப்படையான ஒருங்கிணைந்த செயல்பாடு இருக்கவேண்டும் என்றார் நிகோலோய்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com