பல்கலைக்கழக தேர்தல்களில் சுவரொட்டி ஒட்டும் மாணவர்கள் மீது நடவடிக்கை - தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

டெல்லி மாணவர் சங்கத் தேர்தல்களில் சுவரொட்டி ஒட்டும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
பல்கலைக்கழக தேர்தல்களில் சுவரொட்டி ஒட்டும் மாணவர்கள் மீது நடவடிக்கை - தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
Published on

புதுடெல்லி

பல்கலைகழக வளாகத்தை அசிங்கப்படுத்தும் சுவரொட்டிகள், குப்பைக்கூளங்களை உருவாக்கும் சிறு துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றை உடனடியாக தடை செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே நீதிமன்றம் இது குறித்து உத்தரவிட்டும் அது மீறப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் ரூ 5,000 வரை அபராதம் விதிக்கவும், மாணவர்களை பல்கலைகழகத்திலிருந்து நீக்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.

தங்களது உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை அறிய செப் 18 அன்று மீண்டும் இது குறித்து விசாரிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் சுற்றுச்சூழலை கெடுப்பதாகவும், இது ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com