பிரத்யுமன் கொலை வழக்கில் டிரைவரை மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்த போலீசார்

இந்தியாவையே உலுக்கிய 7 வயது சிறுவனின் கொலை வழக்கில் அப்பாவி நபரை போலீசார் அடித்து துன்புறுத்தி கொலையை ஒப்புக்கொள்ள வைக்க முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரத்யுமன் கொலை வழக்கில் டிரைவரை மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்த போலீசார்
Published on


டெல்லியை அடுத்த குருகிராம் ரயான் சர்வதேச பள்ளியில் படித்து வரும் 7 வயது இரண்டாம் வகுப்பு மாணவன் பிரத்யுமன் தாக்கூர், கடந்த ஒரு மாத்திற்கு முன்பாக பள்ளி கழிவறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பேருந்து ஓட்டுநரின் உதவியாளரான அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததை அசோக்குமார் ஒப்புக்கொண்டதாக கூறினர்.

இது உண்மையல்ல எனக்கூறிய பிரத்யுமன் பெற்றோர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கூறி போராட்டம் நடத்தினர். சிபிஐ விசாரணை நடத்தியதில் அதே பள்ளியை சேர்ந்த 16 வயது மாணவன் கைது செய்யப்பட்டார், பரீட்சையை தள்ளி வைக்க இவ்வாறு செய்ததாக குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் அசோக்குமார் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில், நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து அசோக்குமாரின் மனைவி கூறுகையில், குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு போலீசார் தலைகீழாக தொங்கவிட்டு சித்ரவதை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

கடுமையாக தாக்கியதுடன் மயக்க ஊசிகளை போட்டு துன்புறுத்தியுள்ளனர், பிரத்யுமனின் உடலை பெண் ஒருவரே காரில் வைக்குமாறு அசோக்குமாரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றத்தை ஒப்புக்கொண்டால் எந்த பிரச்சினையும் வராது என்றும், இந்த வழக்கை எப்படி பார்த்துக் கொள்வது என தங்களுக்கு தெரியும் எனவும் போலீசார் கூறியதாக அசோக்குமாரின் சகோதரி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com