ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 16-ந் தேதி திறப்பு

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 16-ந் தேதி திறப்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளில் திறக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.இந்த நாட்களில் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

17-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் . அன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடத்தப்படும். 21-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். அன்றுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும்.பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதற்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com