

புதுடெல்லி,
சபரிமலை ஐயப்பன் கோவில் வழிபாட்டு உரிமை தொடர்பான முக்கிய வழக்கில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து வயது பெண்களும் கோவிலில் வழிபட அனுமதித்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனுக்கள் மீது ஏப்ரல் 7-ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
இந்த மறுஆய்வு மனுக்களை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்க உள்ளது. மனுதாரர்கள் தங்களின் எழுத்து மூல வாதங்களை மார்ச் 14-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறும் இந்த விசாரணை, வழக்கில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பது குறித்து அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.