ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு

-ஓணம் பண்டிகையை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை நாளை  திறப்பு
Published on

திருவனந்தபுரம்,

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-ஓணம் பண்டிகையை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது.

தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார்.தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப் படும் 28-ம் தேதி வரை சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்26-ந் தேதி திருவோண தினத்தில் திருவிதாம் கூர் தேவஸ்தானம் சார்பில் அய்யப் பக்தர்களுக்கு ஒண சத்யா (விருந்து) வழங்கப்படும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com