சபரிமலை தீர்ப்பு அமைதியின்மை, கொந்தளிப்பு, சமுதாயத்தில் பிளவுக்கு வழிவகுக்கும்- மோகன் பகவத்

சபரிமலை தீர்ப்பு அமைதியின்மை, கொந்தளிப்பு, சமுதாயத்தில் பிளவுக்கு வழிவகுத்து உள்ளது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
சபரிமலை தீர்ப்பு அமைதியின்மை, கொந்தளிப்பு, சமுதாயத்தில் பிளவுக்கு வழிவகுக்கும்- மோகன் பகவத்
Published on

நாக்பூர்

மகாராஷ்டிராவின் நாக்பூரில் இந்த ஆண்டு விஜய தசமி விழா நடந்தது. இந்த விழாவில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, நோபல் பரிசு பெற்றவரும், சமூக ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசும்

அரசாங்கம் மாற்றியமைந்தாலும் இந்தியாவின் அண்டை நாடு பாகிஸ்தானின் கொள்கையில் அதே நிலைதான் உள்ளது.ஒரு புதிய அரசாங்கம் அமைந்த போதிலும் எல்லைகள் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை.

சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பானது இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை. சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுவழி மற்றும் முற்றுமுழுதான சமுதாய பிரிவினையை ஏற்கிறது.

விசுவாசத்தின் அடையாளங்களுடனான வெட்கக்கேடான தாக்குதல்கள், மற்றும் பொதுமக்களின் மனதில் தோற்றம் மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் தாக்குதல்களை ஹிந்து சமுதாயம் மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் ஏற்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலைமை சமுதாயத்தின் சமாதானத்தையும் ஆரோக்கியத்தையும் உகந்ததல்ல. சபரிமலை கோயிலின் மீதான சமீபத்திய தீர்ப்பால் இதுபோன்ற நிலைமையைக் காட்டுகிறது.மரபியலின் இயல்பும், அமைப்பும் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மதத் தலைவர்களின் மற்றும் கோடிக்கணக்கான பக்தர்களின் விசுவாசம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.இந்த பாரம்பரியத்தை பின்பற்றும் பெண்களின் பெரிய பிரிவின் வேண்டுகோள் கூட கேட்கப்படவில்லை. தீர்ப்பு சமாதான ஸ்திரத்தன்மை மற்றும் சமூகத்தில் அமைதியின்மை, கொந்தளிப்பு மற்றும் பிரிவினையை அதிகரித்துள்ளது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com